/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கள்ளிப்பட்டு ஏரி கால்வாயில் துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
கள்ளிப்பட்டு ஏரி கால்வாயில் துார்வார விவசாயிகள் கோரிக்கை
கள்ளிப்பட்டு ஏரி கால்வாயில் துார்வார விவசாயிகள் கோரிக்கை
கள்ளிப்பட்டு ஏரி கால்வாயில் துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 20, 2025 10:23 PM
கள்ளிப்பட்டு:கள்ளிப்பட்டு ஏரி பாசன கால்வாயில் துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் கிராமம், கள்ளிப்பட்டு கிராமத்தில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் கள்ளிப்பட்டு ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால், 650 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு செல்லும் கால்வாய் கரையின் இருபுறமும் நாணல் வளர்ந்து, கால்வாய் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு உள்ளது.
மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் வயல்வெளியில் பாயும் நிலை உள்ளது.
எனவே, மழைக்காலம் துவங்குவதற்கு முன், பாசனக்கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கள்ளிப்பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.