/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையில் கிளம்பும் புழுதி சுவாச கோளாறு ஏற்படும் அபாயம்
/
சேதமான சாலையில் கிளம்பும் புழுதி சுவாச கோளாறு ஏற்படும் அபாயம்
சேதமான சாலையில் கிளம்பும் புழுதி சுவாச கோளாறு ஏற்படும் அபாயம்
சேதமான சாலையில் கிளம்பும் புழுதி சுவாச கோளாறு ஏற்படும் அபாயம்
ADDED : ஜன 14, 2025 12:21 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம்,அருங்குன்றம், மதுார், பழவேரி, திருமுக்கூடல், எடமிச்சு ஆகிய பகுதிகளில், குவாரிகள் இயங்கிவருகின்றன.
இங்கு, வெடி வைத்து தகர்க்கப்படும் பாறைகள், சுற்றுப்புற பகுதிகளில் செயல்படும் கிரஷர்களில், கற்களாவும், எம்.சான்ட் மணலாகவும் உடைக்கப்பட்டு வருகின்றன.
அவை, லாரிகள் வாயிலாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து உடைக்கப்பட்ட எம்.சான்ட் மற்றும் கற்கள் ஆகியவை, லாரிகள் வாயிலாக பழவேரி, அருங்குன்றம், திருமுக்கூடல் வழியாக, தினமும் கொண்டு செல்லப்படுகின்றன.
அவ்வாறு கொண்டு செல்லும்போது சாலை சேதமடைந்து, போக்கு வரத்துக்கு லாயக்கற்றதாக மாறுகிறது.
இந்த சாலையில், தொடர்ந்து லாரிகள் செல்லும்போது புழுதி கிளம்பி, பின்னே செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், புழுதி கலந்த காற்றை சுவாசித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும்அபாயம் உள்ளது.
இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாவட்ட நிர்வாகம்மெத்தனமாக இருந்துவருகிறது.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறையினரும் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருவது, அப்பகுதிவாசிகளிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், குவாரி லாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.