/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ- - சேவை மையம் திறப்பு
/
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ- - சேவை மையம் திறப்பு
ADDED : அக் 29, 2025 08:03 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், இ- - சேவை மையம் மக்கள் பயன் பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ., அலுவலகங்களிலும் இ- - சேவை மையம் துவக்க, 2022-ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, உத்திரமேரூரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலக அறையில் இ - -சேவை மையம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், உத்திர மேரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ், 21 லட்சம் செலவில், எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், புதிய இ- - சேவை மைய கட்டடம் கட்டும் பணி, ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்டது.
பணிகள் முடிந்த நிலையில், உத்தரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், இ- - சேவை மையத்தை நேற்று, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சோமசுந்தர், உத்திரமேரூர் ஒன்றிய தலைவர் ஹேமலதா மற்றும் பலர் பங்கேற்றனர்.

