/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு மண் கொட்டி சமன்படுத்தும் பணி
/
நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு மண் கொட்டி சமன்படுத்தும் பணி
நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு மண் கொட்டி சமன்படுத்தும் பணி
நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு மண் கொட்டி சமன்படுத்தும் பணி
ADDED : ஏப் 10, 2025 01:47 AM
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களின் சாய் தளத்தில் இருபுறமும், எம் - சாண்ட் துகள் கொட்டி நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வாயிலாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஆறு வழியாக விரிவுபடுத்துவதற்கு, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இதில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் பணி நிறைவு பெற்று உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரை, 34 கி.மீ., துாரத்தில் சாலை விரிவுபடுத்தும் பணி மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கவில்லை.
குறிப்பாக, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை கடவுப்பாதை மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த இடத்தில், செடி, கொடிகள் வளர்ந்திருந்தன.
மேம்பாலத்தின் இருபுறமும், வாகனங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ப சமன்படுத்தும் பணி துவங்குவதற்கு டெண்டர் விட்டும், ஒப்பந்ததாரர் பணியை துவக்கவில்லை.
இதனால், மறு 'டெண்டர்' விட்டு பணிகளை துவக்க, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் முடிவு செய்தது. கடந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்ததாரருக்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
புதிய டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனம், பணியை துவக்கி உள்ளது. மேம்பாலத்தையும் சாலையையும் இணைக்கும் வகையில் எம் - சாண்ட் மண் கொட்டி சமன்படுத்தும் பணியை துவக்கி மேற்கொண்டு வருகிறது.

