/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தினமலர் செய்தி எதிரொலி.... கால்வாய் கட்டுமானப்பணி நெடுஞ்சாலை துறை தீவிரம்
/
தினமலர் செய்தி எதிரொலி.... கால்வாய் கட்டுமானப்பணி நெடுஞ்சாலை துறை தீவிரம்
தினமலர் செய்தி எதிரொலி.... கால்வாய் கட்டுமானப்பணி நெடுஞ்சாலை துறை தீவிரம்
தினமலர் செய்தி எதிரொலி.... கால்வாய் கட்டுமானப்பணி நெடுஞ்சாலை துறை தீவிரம்
ADDED : பிப் 21, 2025 12:37 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், அரசு அருங்காட்சியகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தலைமை அஞ்சலகம் நுழைவாயில், பி.எஸ்கே. தெரு, ஆஸ்பிட்டல் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், கால்வாய்க்கு இணைப்பு வழங்கப்படாமலும், மேல்தளம் அமைக்கப்படாமலும் இருந்தது.
இதனால், மழைக்காலத்தில் இப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இணைப்பு இல்லாத பகுதியில் கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1 மீட்டர் அகலமுள்ள கால்வாயை 1.20 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தி கால்வாய்க்கு, கான்கிரீட் தளம் அமைக்கவும், இணைப்பு இல்லாத பகுதியில் இணைப்பு ஏற்படுத்தவும், மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் துவங்கி பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் ரயில்வே சாலையில் உள்ள புற்றுநோய் மருத்துமவனை அருகில், மின்மாற்றி பொருத்தப்பட்டு இருந்த மின்கம்பம் அமைந்துள்ள பகுதியில், கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
எனவே, விடுபட்ட இடத்தில் மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து கட்டுமானப்பணிக்கு இடையூறாக இருந்த மின்மாற்றி கம்பம் இடமாற்றம் செய்யப்பட்டு, விடுபட்ட இடத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்போது, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.