/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா
ADDED : மார் 28, 2025 01:40 AM

காஞ்சிபுரம்:தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் உள்ள 3 மாதம் முதல் 6 வயதுடைய ஆரம்ப கால பயிற்சி மையங்களில் பயிலும் பார்வையற்ற , காது கேளாத மற்றும் வாய் பேசாதோர், புற உலக சிந்தனையற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய இளஞ்சிறார்களுக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான 3 மாதம் முதல் 6 வயதுடைய ஆரம்பகால பயிற்சி மையங்களில் பயிலும் இளஞ்சிறார்களுக்கான ஒரு நாள் கல்விச் சுற்றுலா காஞ்சிபுரத்திலிருந்து, மாமல்லபுரம் கடற்கரை சுற்றுலா தளத்திற்கு, 20 மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா வாகனத்தை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.