ADDED : ஜன 03, 2025 07:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காரைப்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக குடியிருப்பு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராணி, 60. இவர், காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் செல்ல வேண்டியிருந்ததால், நேற்று பொன்னேரிக்கரை சந்திப்பிற்கு, கணவர் சுப்பிரமணியுடன், 79, வந்தார்.
ஆட்டோவில் மனைவி ராணியை ஏற்றிவிட்டு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், சுப்பிரமணி மீது மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

