ADDED : ஏப் 01, 2025 07:43 PM
காஞ்சிபுரம்:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன், 43. இவர், 'மாருதி ரிட்ஸ்' காரில், தாய் ஜெயலட்சுமி, சகோதரி ஜமுனாராணி, மனைவி ஐஸ்வர்யா லட்சுமி, தந்தை கோபாலகிருஷ்ணன், 79, ஆகியோருடன் ஊட்டி சென்றுள்ளார்.
அங்கிருந்து, சென்னைக்கு நேற்று காரில் திரும்பி கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் அருகே, கீழம்பி பகுதியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 4:15 மணிக்கு கார் வந்த போது, பின்னால் வந்த, 'மகேந்திரா எக்.யூ.வி.' கார் மோதியது.
இதில், காரில் இருந்த கோபாலகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, 'மகேந்திரா எக்.யூ.வி.' காரை ஓட்டி வந்த சேதுராமன், 26, என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

