/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி பலி
/
தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி பலி
ADDED : செப் 28, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணிமங்கலம்;மணிமங்கலம் அருகே வீட்டில் காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி. சிகிச்சை பலனின்ற ி நேற்று உயிரிழந்தார்.
மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீதா, 70. இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 22ம் தேதி, வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து, காஸ் கசிந்துள்ளது.
இதை கவனிக்காத சீதா, ஸ்டவ்வை பற்ற வைத்தபோது, வீட்டில் தீ பற்றியது. இதில் பலத்த காயமடைந்த சீதா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பெற்று வந்த சீதா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.