sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆதனஞ்சேரியில் மின் மோட்டார் பழுது ஒரு மாதமாக குடிநீர் 'சப்ளை' பாதிப்பு

/

ஆதனஞ்சேரியில் மின் மோட்டார் பழுது ஒரு மாதமாக குடிநீர் 'சப்ளை' பாதிப்பு

ஆதனஞ்சேரியில் மின் மோட்டார் பழுது ஒரு மாதமாக குடிநீர் 'சப்ளை' பாதிப்பு

ஆதனஞ்சேரியில் மின் மோட்டார் பழுது ஒரு மாதமாக குடிநீர் 'சப்ளை' பாதிப்பு


ADDED : ஏப் 26, 2025 07:01 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 07:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் ஆதனஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, படப்பை- - ஒரத்துார் சாலையில் உள்ள கன்னி கோவில் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, தெருக்குழாய் வாயிலாக, காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மின் மோட்டார் பழுது காரணமாக, கடந்த ஒரு மாதமாக தெருக்குழாய்களில் குடிநீர் சரிவர வரவில்லை. இதனால், அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் இரண்டு மோட்டார்களில் ஒரு மோட்டார் பழுதாகி விட்டது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்யவில்லை.

தற்போது கோடை காலம் என்பதால், மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தெருக்குழாய்களில், காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை மட்டும், குறைந்த வேகத்தில் தண்ணீர் வருகிறது.

அது போதுமானதாக இல்லை. எனவே, மின் மோட்டாரை சரிசெய்து, ஆதனஞ்சேரியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us