/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒட்டு போட்டு துருத்தி நிற்கும் மின் கேபிள்: கீரநல்லுாரில் விபத்து அபாயம்
/
ஒட்டு போட்டு துருத்தி நிற்கும் மின் கேபிள்: கீரநல்லுாரில் விபத்து அபாயம்
ஒட்டு போட்டு துருத்தி நிற்கும் மின் கேபிள்: கீரநல்லுாரில் விபத்து அபாயம்
ஒட்டு போட்டு துருத்தி நிற்கும் மின் கேபிள்: கீரநல்லுாரில் விபத்து அபாயம்
ADDED : அக் 28, 2025 11:48 PM

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, கீரநல்லுார் செல்லும் சாலையோரம், புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிக்காக, ஆபத்தான நிலையில் செல்லும் மின் கேபிளால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த, சேந்தமங்கலம் அருகே இருந்து கீரநல்லுார் சாலை பிரிந்து செல்கிறது.
கீரநல்லுார், பொடவூர் உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியே, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வகின்றனர்.
அதேபோல, மேற்கூறிய கிராமத்தைச் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்கள், பிள்ளைசத்திரம், சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் இந்த சாலை வழியே நடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கீரநல்லுார் சாலையோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையின் கட்டுமான பணிக்காக, சாலையோரம் மின் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப் பட்டுள்ளது.
சாலையோரம் தரையில் செல்லும் மின் கேபிள், மூன்று இடங்களில் ஒன்றோடு ஒன்று இணைப்பு போடப்பட்டு உள்ளது. அவை சாலைக்கு அருகில் உள்ளதால், மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் கீரநல்லுார் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
அதே போல, மேய்ச்சளுக்கு வரும் கால்நடைகள், மின் கேபிளில் உரசி, உயிரிழப்பு விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்து உள்ளது.
தற்போது, பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சாலையில் நடந்து செல்பவர்கள் மின்சாரம் தாக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, உயிர் சேதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட மின் வாரிய உயர் அதிகாரிகள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அபாய நிலையில் உள்ள மின் கேபிளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீரநல்லுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

