மின் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த அறிவுரை
மின் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த அறிவுரை
UPDATED : செப் 23, 2026 09:43 PM
ADDED : செப் 23, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து, மின் வாரிய ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என, பொறியாளர்கள் அறிவுரைத்தனர்.
காஞ்சிபுரத்தில் மின் வாரிய ஊழியர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு கோட்டப்பொறியாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் லட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மின் உபகரணங்களை பாதுகாப்பாக ஊழியர்கள் எப்படி கையாள வேண்டும் என, காஞ்சிபுரம் வடக்கு கோட்டப்பொறியாளர் பாண்டியராஜன் எடுத்துரைத்தார்.
இதில், உதவி செயற்பொறியாளர் ஹிரிதாஸ், மோகன்ராஜ், பாஸ்கர் மற்றும் காஞ்சிபுரம், ஓரிக்கை, பிள்ளையார்பாளையம், பரந்துார், நீர்வள்ளூர் துணை மின் நிலைய ஊழியர்கள் பங்கேற்றனர்.
