/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விரிசல் அடைந்த கம்பத்திற்கு 'கட்டு' மின்வாரிய ஊழியர்கள் 'புதுடெக்னிக்'

ADDED : நவ 16, 2024 12:42 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு திருக்காலிமேடு பாலாஜி நகர் 2வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், தெரு மின்விளக்கிற்காகவும் சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு மின்கம்பத்தில் அடிப்பாகம் முதல் மேல் வரை விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் நிலையில் உள்ளது. மின்கம்பம் நொறுங்கி விடும் என்பதால், மின்வாரிய ஊழியர்கள் கம்பத்திற்கு கயிறு மற்றும் ஒயர் வாயிலாக கட்டு போட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த காற்றுடன் மழை பெய்தால், சிதிலமடைந்த நிலையில் உள்ள மின்கம்பம் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது. இதனால், பெரிய அளவில் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சிதிலமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.