/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் சாய்ந்த மின்கம்பம் மின்வாரியம் அலட்சியம்
/
சாலையோரம் சாய்ந்த மின்கம்பம் மின்வாரியம் அலட்சியம்
சாலையோரம் சாய்ந்த மின்கம்பம் மின்வாரியம் அலட்சியம்
சாலையோரம் சாய்ந்த மின்கம்பம் மின்வாரியம் அலட்சியம்
ADDED : டிச 04, 2024 12:20 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட மோச்சேரி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, படப்பை மின் வாரிய அலுவலகம் வாயிலாக, செரப்பனஞ்சேரி வழியாக மின் வழித்தடம் செல்கிறது.
இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு முன் மோச்சேரியில் இருந்து செரப்பனஞ்சேரி வந்த கார், கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குளானது.
இதில், மின்கம்பத்தின் அடி பகுதி உடைந்து சேதமானது. இதையடுத்து, படப்பை மின் வாரியத்துறையினர், கடந்த மாதம் புதிய மின்கம்பத்தை அப்பகுதியில் நட்டனர். ஆனால், மின் ஒயர் இணைப்பு மாற்றி அமைக்கப்படாமல், உடைந்த மின்கம்பத்திலேயே இணைப்பு உள்ளது.
இந்த நிலையில், ‛பெங்சல்' புயலால், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், மோச்சேரி சாலையில் சேதமான மின் கம்பம், சாலையில் சாய்ந்தது. தற்போது, முற்றிலும் உடைந்து சாய்ந்துள்ள மின்கம்பத்தின் மின் ஒயர், புதிதாக நடபட்ட மின்கம்பத்தில் சிக்கி, எப்போது வேண்டுமானலும் மின்கம்பம் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மின் வாரிய உயர் அதிகாரிகள் உயிர் சேதம் ஏற்படும் முன், உடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிதாக நடப்பட்டுள்ள மின்கம்பத்தின் வழியாக இணைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.