/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் சென்ற மின் கேபிள் மின்வாரியத்தினர் அகற்றம்
/
கால்வாயில் சென்ற மின் கேபிள் மின்வாரியத்தினர் அகற்றம்
கால்வாயில் சென்ற மின் கேபிள் மின்வாரியத்தினர் அகற்றம்
கால்வாயில் சென்ற மின் கேபிள் மின்வாரியத்தினர் அகற்றம்
ADDED : நவ 10, 2025 01:08 AM

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மழைநீர் வடிகால்வாயில், துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த மின் கேபிளை மின்வாரியத்தினர் நேற்று அகற்றினர்.
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், கிழக்கு பகுதியில், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மூங்கில் மண்டபம் சிக்னல் அருகில் குளம்போல மழைநீர் தேங்கியது.
இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள அடைப்பை பொக்லைன் இயந்திரம் வாயிலாக நீக்க முயற்சித்தனர்.
அப்போது, மழைநீர் கால்வாயில், மின்வாரியத்தினர், உயர் மின்னழுத்த மின் கேபிள் பதித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால், கால்வாயை துார்வார முடியாத சூழல் ஏற்பட்டது.
மின்வாரியத்தினர் மின் கேபிளை அகற்றினால்தான், கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க முடியும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதையடுத்து, வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாய் வழியாக சென்ற மின் கேபிளை மின்வாரியத்தினர் நேற்று அகற்றினர்.
துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த மின் கேபிள் அகற்றப்பட்டுள்ளதால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள், நெடுஞ்சாலைத் துறையினர் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

