/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி
/
பழையசீவரம் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி
ADDED : நவ 11, 2024 11:17 PM
வாவாலாஜாபாத்: வாலாஜாபாத்- - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
பழையசீவரம் மற்றும் திருமுக்கூடல் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதனால், இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில், நள்ளிரவு வரை பயணியர் நடமாட்டம் உள்ளது. இரவு 10:00 மணி வரையிலும், அதிகாலை நேரத்திலும் பெண் தொழிலாளர்கள் இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, கம்பெனி வேன் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் போதுமான மின் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நிலை இருந்தது.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில், அப்பகுதி ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலையின் இருபுறமும் மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.