/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எல்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
எல்லையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : பிப் 08, 2025 11:41 PM
கிளார்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் கிராம தேவதைகள் கொல்லியம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் சிறிய அளவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை கிராம பொதுமக்கள் கற்கோவிலாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த ஊராட்சிமன்ற தலைவர், நாட்டாண்மைதாரர்கள், கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி சற்று பெரிய அளவில் கருங்கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. மாலை 5:30 மணிக்கு முதற்கால யாக பூஜையும், மாலை 6:00 மணிக்கு பரதாலயா நாட்டிய பள்ளி குழுவினரின் நாட்டியாஞ்சலி நி்கழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு, எல்லையம்மன், கங்கையம்மன், பரிவாரமூர்த்திகள், விநாயகர், நாகர், துர்கை விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட உள்ளது.
நாளை காலை 5:00 மணிக்கு கோ பூஜையும், 6:30 மணிக்கு திருக்கழுக்குன்றம் அகஸ்திய கிருபா தலைமையில், வேதவிற்பன்னர்கள் கொல்லியமமன் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர். தொடர்ந்து மஹா அபிஷேகம் நடக்கிறது.

