/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் பணி அரைகுறை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
கால்வாய் பணி அரைகுறை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கால்வாய் பணி அரைகுறை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கால்வாய் பணி அரைகுறை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : டிச 26, 2024 01:02 AM

காஞ்சிபுரம், டசின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர் முதல், செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள புறவழி சாலையான, ஓரிக்கை மிலிட்டரி சாலை 7 கி.மீ., நீளமும், 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.
இச்சாலையில், சென்னை -- கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், சரவணா நகர் பிரதான சாலை அருகே, வடிகால்வாய் கட்டுமான பணி பாதியில் விடப்பட்டு, ஆறு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், திறந்து கிடக்கும் கால்வாயில் அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், மழைநீர் வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

