/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெங்கச்சேரியில் வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தல்
/
வெங்கச்சேரியில் வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 16, 2025 08:20 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வெங்கச்சேரி கிராமத்தை சுற்றி ஆதவப்பாக்கம், காவாம்பயிர், மாகரல், சித்தாலப்பாக்கம், காவந்தண்டலம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள பொதுமக்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க, 15 கி.மீ., தூரமுள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது பொதுமக்களுக்கு கால விரயமும், உடல் அலைச்சலும் ஏற்படுகிறது. வெங்கச்சேரிக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் உள்ளது.
காஞ்சிபுரம் --- உத்திரமேரூர் சாலையில் உள்ள வெங்கச்சேரி செய்யாற்று பாலம் அருகே வாரச்சந்தை அமைக்க போதிய இடவசதி உள்ளது. எனவே, வெங்கச்சேரியில் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

