/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூடப்பட்ட உரம் தயாரிப்பு மையம் விளையாட்டு திடலாக்க கோரிக்கை
/
மூடப்பட்ட உரம் தயாரிப்பு மையம் விளையாட்டு திடலாக்க கோரிக்கை
மூடப்பட்ட உரம் தயாரிப்பு மையம் விளையாட்டு திடலாக்க கோரிக்கை
மூடப்பட்ட உரம் தயாரிப்பு மையம் விளையாட்டு திடலாக்க கோரிக்கை
ADDED : மார் 05, 2024 12:47 AM

சின்ன போரூர், சின்ன போரூரில், மூடப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் மையத்தை அகற்றி விட்டு, பள்ளி மாணவர்கள் விளையாட மைதானம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூர் பள்ளி தெருவில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியின் பின்புறம் உள்ள இடத்தில், மாநகராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன், உரம் தயாரிக்கும் மையம் உருவாக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்த புகாரையடுத்து, உரம் தயாரிக்கும் மையம் மூடப்பட்டது. ஆனால், அந்த இடம் எந்த பயன்பாட்டிலும் இல்லாமல், பாழடைந்த நிலையில் உள்ளது.
எனவே, அங்குள்ள கட்டுமானங்களை அகற்றி விட்டு, நடுநிலைப் பள்ளி குழந்தைகள் விளையாட விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.