/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்பு கட்டடத்தால் சமுதாய கூடத்திற்கு இடையூறு
/
ஆக்கிரமிப்பு கட்டடத்தால் சமுதாய கூடத்திற்கு இடையூறு
ஆக்கிரமிப்பு கட்டடத்தால் சமுதாய கூடத்திற்கு இடையூறு
ஆக்கிரமிப்பு கட்டடத்தால் சமுதாய கூடத்திற்கு இடையூறு
ADDED : ஜன 25, 2025 09:35 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையசீவரம் கிராமம். இந்த கிராமத்திற்கான சமுதாயக்கூடம், அப்பகுதி பிரதான சாலையோரத்தில், லட்சுமி நரசிம்ம கோவில் அருகே உள்ளது. இந்த சமுதாயக்கூடத்திற்கு முன் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், குடியிருப்புகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், சமுதாயக்கூடத்திற்கு செல்ல பிரதான சாலையோர வழியை செல்ல முடியாமல், கோவிலுக்கு செல்லும் சாலையை பயன்படுத்தி, சுற்றி செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால், சமுதாயக்கூடத்திற்கு வருவோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, பழையசீவரம் சமுதாயக்கூடத்திற்கு சென்று வர இடையூறான ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.