ADDED : பிப் 05, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ், 31. வண்டலுார் அருகே தங்கி, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வண்டலுார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டார்.
இதில், பலத்த காயம் அடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை ஹரிஷ் உடலை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.

