/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முருகன் கோவிலில் சமத்துவ விருந்து
/
முருகன் கோவிலில் சமத்துவ விருந்து
ADDED : ஜன 27, 2025 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ விருந்து  நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று முருகரை வழிப்பட்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், குன்றத்துார் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

