/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டுரை, ஓவிய போட்டி; மாணவியருக்கு கலெக்டர் பரிசளிப்பு
/
கட்டுரை, ஓவிய போட்டி; மாணவியருக்கு கலெக்டர் பரிசளிப்பு
கட்டுரை, ஓவிய போட்டி; மாணவியருக்கு கலெக்டர் பரிசளிப்பு
கட்டுரை, ஓவிய போட்டி; மாணவியருக்கு கலெக்டர் பரிசளிப்பு
ADDED : மார் 18, 2025 12:15 AM
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், காப்பீட்டு துறையில், நுகர்வோர் சந்திக்கும் பிரச்னை என்ற தலைப்பில், பள்ளி மாணவியருக்கானகட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், கட்டுரைபோட்டியில், தாமல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி சமீரா முதல் பரிசும், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி கீர்த்தனாஇரண்டாம் பரிசும், காஞ்சி புரம் எஸ்.எஸ்.கே.வி.,மகளிர் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி ஜசிகா மூன்றாம் பரிசும் பெற்றார்.
கவிதை போட்டியில், உத்திரமேரூர் 1 - 3வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி காவியா முதல் பரிசும், காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி ரஷிதா இரண்டாம் பரிசும்,அயிமிச்சேரி ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ம் வகுப்பு மாணவிஅன்சிகா மூன்றாம் பரிசும் பெற்றார்.
ஓவிய போட்டியில், வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி ரோஷிணி முதல் பரிசும், காஞ்சிபுரம்எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவி ஜெசி மார்க்சியாஇரண்டாம் பரிசும், உத்திர மேரூர் 1 - 3வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி பூஜாஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, சான்றிதழ், பதக்கம் வழங்கி பாராட்டினார்.