ADDED : ஜன 23, 2025 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - கா. மு.சு.அரசு மேல்நிலைப் பள்ளியில், கல்லுாரி மாணவ - மாணவியரிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி, நடந்தது.
இதில், மாவட்டத்தில் உள்ள எட்டு கல்லுாரிகளில் 16 மாணவ -- -மாணவியர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி ந.சுதா, ‛வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியில் பங்கேற்றார்.
முதல் பரிசாக 10,000 ரூபாய் வென்றார். பரிசு பெற்ற மாணவியை கல்லுாரி முதல்வர் திருமாமகள் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.