/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்குடை இருந்தும் பயனில்லை பேருந்து பயணியர் கடும் அவதி
/
நிழற்குடை இருந்தும் பயனில்லை பேருந்து பயணியர் கடும் அவதி
நிழற்குடை இருந்தும் பயனில்லை பேருந்து பயணியர் கடும் அவதி
நிழற்குடை இருந்தும் பயனில்லை பேருந்து பயணியர் கடும் அவதி
ADDED : டிச 05, 2024 02:16 AM

காஞ்சிபுரம், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள களக்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை, களக்காட்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கூரையில் சிமென்ட்காரை பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியேதெரியும் நிலையில் சிதிலமடைந்து உள்ளது.
இதனால், நிழற் குடையை பயன்படுத்துவதை பயணியர் தவிர்த்து வருகின்றனர்.
மேலும், நிழற்குடை அருகே ஓரமாக நின்று வெயில், மழையில் பயணி யர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பயணியர் நிழற்குடை இருந்தும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக நிழற்குடை அமைக்க களக்காட்டூர் ஊராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதியினர் வலியுறுத்திஉள்ளனர்.