/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் ஊழியரின் தரக்குறைவான பேச்சு பொருட்களை ஒப்படைத்த மாஜி கவுன்சிலர்

ADDED : நவ 20, 2024 11:40 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நிமிந்தகார ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் ரகு. இவர், காஞ்சிபுரம் மாநகராட்சியின், 9வது வார்டில் இரு முறை கவுன்சிலராக பதவி வகித்தவர்.
இவர், மேற்கு ராஜவீதியில் உள்ள ரேஷன் கடைக்கு, நேற்று முன்தினம் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க, காலை 10:30 மணிக்கு சென்றுள்ளார். அப்போது, நீண்ட நேரம் காத்திருந்து, பில் போட்டு, எடையாளரிடம் பொருட்கள் வாங்க செல்லும்போது, தரக்குறைவாக பேசி, ரேஷன் பொருட்களை ரகுவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால், பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்ற அவர், பாதி வழியில் திரும்பி, மீண்டும் ரேஷன் கடைக்கு சென்று, ரேஷன் கடை வாசலிலேயே பொருட்களை வைத்து, திருப்பி வழங்கியுள்ளார்.
அங்கேயே நின்றுகொண்டு, ரேஷன் கடையில் உள்ள எடை போடுபவர், நுகர்வோரை தரக்குறைவாக பேசி வருவதாக வீடியோ ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து, உணவு பொருள் வழங்கல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தாலுகா அளவிலான உணவு வழங்கல் அதிகாரியிடம் அந்த வீடியோவை அனுப்பி உள்ளேன். கடைக்கு சென்று விசாரித்து அறிக்கை வழங்க கேட்டுள்ளேன்' என்றார்.