/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
நெல் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 10, 2025 07:49 PM
கரும்பாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தை சுற்றி ராஜம்பேட்டை, குருமஞ்சேரி, மிளகர்மேனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், ஆழ்த்துளை கிணற்று பாசனம் வாயிலாக முப்போகம் நெல் சாகுபடி செய்கின்றனர். அதிக நெல் விளைச்சல் உள்ள இப்பகுதியில், நவரை, சொர்ணவாரி ஆகிய பருவங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் இயங்குகிறது.
இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், கரும்பாக்கம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் அறுவடையாகும் நெல்லை விவசாயிகள் கொள்முதல் செய்கின்றனர். இப்பகுதி நெல் கொள்முதல் நிலையத்தில், போதிய இடவசதி இல்லை.
இதனால், நிலையத்திற்கு வெளியில், திறந்தவெளியில் மூட்டைகள் வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது,
சாகுபடி செய்த நெல், கொள்முதல் செய்யும் நேரத்தில், மழையில் நனைந்து நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக வைத்திருந்து விற்பனை செய்ய, இப்பகுதியில் நெல் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.

