/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
படூர் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 20, 2025 12:57 AM
குண்ணவாக்கம், உத்திரமேரூர் ஒன்றியம், நெல்வாய் கூட்டுச்சாலையில் இருந்து, குண்ணவாக்களம் கூட்டுச்சாலை வழியாக மதுார் சென்றடையும் சாலை உள்ளது. சுற்றுவட்டார கிராமத்தினர் இச்சாலை வழியாக இரவு, பகலாக பயணிக்கின்றனர்.
குறிப்பாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பணி முடிந்து இருசக்கர வாகனம் வாயிலாக இரவு நேரங்களில் இச்சாலை வழியாக வீடு திரும்புகின்றனர்.
இந்நிலையில், குண்ணவாக்கம் கூட்டுச்சாலை பகுதியில், சில மாதங்களாக மர்ம நபர்கள் மற்றும் போதை கும்பலின் நடமாட்டம் அதிகம் உள்ளதாக பலரும் அச்சப்படுகின்றனர்.
அப்பகுதியை சுற்றிய நான்குபுற சாலைகளிலும் ஒரு கி.மீ., துாரத்திற்கு குடியிருப்புகள் இல்லாததால் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல், கஞ்சா பயன்படுத்துவோர் உள்ளிட்டோர் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் அச்சாலை வழியாக பயணிப்போரை மர்ம நபர்கள் அச்சுறுத்தி வருவதாகவும் சுற்றுவட்டார கிராமத்தினர் புகார் கூறி வருகின்றனர்.
இதனால், குண்ணவாக்கம் கூட்டுச்சாலை பகுதியில், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வருவதோடு, படூர் கூட்டுச் சாலையில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.