/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குமரகோட்டத்தில் அன்னதான திட்டம் எண்ணிக்கை அதிகரிக்க எதிர்பார்ப்பு
/
குமரகோட்டத்தில் அன்னதான திட்டம் எண்ணிக்கை அதிகரிக்க எதிர்பார்ப்பு
குமரகோட்டத்தில் அன்னதான திட்டம் எண்ணிக்கை அதிகரிக்க எதிர்பார்ப்பு
குமரகோட்டத்தில் அன்னதான திட்டம் எண்ணிக்கை அதிகரிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 22, 2025 12:58 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் அன்னதான திட்டத்தின் கீழ் தினமும், 50 பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை விசேஷ நாட்களில் 100 பேருக்கு வழங்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், குமரகோட்டம் முருகன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழக அரசின், அன்னதான திட்டத்தின்கீழ், தினமும், 50 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் உள்ளிட்ட விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால், விசேஷ நாட்களில் அன்னதான டோக்கன் வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இத்திட்டத்தில், 50 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுவதால், டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் குமர கோட்டத்தில், தினமும் 50 பேருக்கு வழங்கப்படும் அன்னதானத்தை கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் உள்ளிட்ட விசேஷ நாட்களில், 100 பேருக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.