/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த நிழற்குடை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
சேதமடைந்த நிழற்குடை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 30, 2025 11:39 PM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம்மருதம் கிராமத்தில், கடந்த20 ஆண்டுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, பயணியர் நிழற் குடை முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதனால், பயணியர் நிழற்குடை சேதமடைந்து, கூரையில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பேருந்துக்காக காத்திருக்கும் முதியோர், கர்ப்பிணியர் ஆகியோர் உள்ளே அமராமல், சாலையிலே நின்று பேருந்து பிடித்து செல்கின்றனர்.
மேலும், வெயில் மற்றும் மழை நேரங்களில், நிழற்குடையை பயணியர்பயன்படுத்த முடியாதநிலை தொடர்ந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும்என, அப்பகுதிவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பயணியர் நிழற்குடை முறையாக பராமரிக்கப்படாததால், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நின்றுகொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சீரமைக்க துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.