/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 01, 2024 06:59 AM

வேடல் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, வேடல் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, கூத்திரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இரு புறமும், ஒரு மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவுபடுத்தும் பணி, மூன்று மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டு உள்ளது.
ஒரு மீட்டர் அகலத்திற்கு, பெரிய ஜல்லி கொட்டிவிட்டு, அதன் மீது தார் ஜல்லி கலவை கொட்டி செப்பணிடவில்லை.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வேடல், கூத்திரம்பாக்கம்,தொடூர் ஆகிய கிராம மக்கள் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஒன்றிய சாலையா? நெடுஞ்சாலை துறை சாலையா? என, ஆய்வு செய்து விட்டு, ஒன்றிய சாலையாக இருந்தால் போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.