/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் பஸ் நடத்துனரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு
/
தனியார் பஸ் நடத்துனரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு
தனியார் பஸ் நடத்துனரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு
தனியார் பஸ் நடத்துனரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு
ADDED : மார் 02, 2024 11:16 PM

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அருகே ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 37; தனியார் பேருந்து நடத்துனர். ராமாபுரம் பெட்ரோல் பங்கில் பேருந்தை நிறுத்திவிட்டு, ஓட்டுனர் வீட்டிற்கு சென்ற நிலையில், நடத்துனர் ராஜசேகரன் மட்டும் பேருந்தில் துாங்கிக் கொண் டிருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை துாங்கி கொண்டிருந்த நடத்துனரிடம், கத்தியை காட்டி மிரட்டி, பையில் இருந்த 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் 'ஜிபே'- வாயிலாக, 15,500 ரூபாய், மொபைல்போனை மர்மநபர்கள் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் ராஜசேகரன் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிந்த போலீசார், பணம் அனுப்பிய ஜிபே மொபைல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், மதுரையைச் சேர்ந்த தமிழழகன், 19, உசிலம்பட்டியைச் சேர்ந்த கருப்பன் என்கிற கருப்பசாமி, 25, சென்னை, ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அருண்குமார், 21, ஆகிய மூவரும் திருடியது தெரியவந்தது.
பின், மூவரையும் கைது செய்த போலீசார், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

