/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண் மருத்துவ முகாம் 342 நெசவாளர்கள் பங்கேற்பு
/
கண் மருத்துவ முகாம் 342 நெசவாளர்கள் பங்கேற்பு
ADDED : நவ 27, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட பா.ஜ., சார்பில் நேற்று நடந்தநெசவாளர்களுக்கான கண் மருத்துவ பரிசோதனை முகாமில் 342 பேர் பங்கேற்றனர்.
பா.ஜ., மாநில மருத்துவ பிரிவு செயலர் செல்லசாமி, காஞ்சிபுரம் மாவட்ட நெசவாளர் பிரிவு, மார்னிங்ஸ்டார் அறக்கட்டளை சார்பில், நெசவாளர்களுக்கான இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். முகாமில், 342 நெசவாளர்கள் பங்கேற்றனர். இதில் 210 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

