/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவலாளி கொலை வழக்கில் சிவந்தாங்கல் இளைஞர் கைது
/
காவலாளி கொலை வழக்கில் சிவந்தாங்கல் இளைஞர் கைது
ADDED : நவ 27, 2025 04:48 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அலுவலகம் அருகே, தலையில் காயங்களுடன் ஆண் உடல் மீட்கப்பட்ட வழக்கில், ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அலுவலகம் அருகே, தேரடி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பிள்ளைமண்டபம் பகுதியில், 24ம் தேதி இரவு 11:00 மணிக்கு, தலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த ஆண் உடலை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், இறந்தவர் சீர்காழி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை, 44, என்பதும், ஸ்ரீபெரும்புதுாரில் வாடகைக்கு தங்கி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், ஸ்ரீபெரும்புதுார் புதிதாக கட்டப்பட்டு வரும், டி-மார்டு வணிக கடையில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிந்தது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார், சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கண்ணியப்பன், 28, என்பவரை, சந்தேகத்தின் பேரில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

