/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை மேனேஜர் துாக்கிட்டு தற்கொலை
/
தொழிற்சாலை மேனேஜர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 09, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை,:படப்பை அருகே மாடம்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், 34. மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ஆர்த்தி, 30. சிறுசேரியில் உள்ள ஐ.டி.,நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ரஞ்சித்குமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு, குரோம்பட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.