/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஓடும் கழிவுநீர் ஆறு ஆரம்பாக்கத்தில் தொழிற்சாலை அட்டகாசம்
/
சாலையில் ஓடும் கழிவுநீர் ஆறு ஆரம்பாக்கத்தில் தொழிற்சாலை அட்டகாசம்
சாலையில் ஓடும் கழிவுநீர் ஆறு ஆரம்பாக்கத்தில் தொழிற்சாலை அட்டகாசம்
சாலையில் ஓடும் கழிவுநீர் ஆறு ஆரம்பாக்கத்தில் தொழிற்சாலை அட்டகாசம்
ADDED : நவ 25, 2025 04:03 AM

ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே ஆரம்பாக்கம் சந்திப்பில், சாக்கடை கழிவுநீரை சாலையில் வெளியேற்றும் தனியார் தொழிற்சாலையால் வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்கள் நோய் தொற்று பரவும் அச்சத்தில் உள்ளனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அருகே ஆரம்பாக்கம் சந்திப்பில் உணவகம், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்குள்ள உயர் மின்னழுத்த பரிமாற்ற உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வண்டலுார் - -வாலாஜாபாத் சாலையில் ஆறு போல ஓடுகிறது.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக சாலையில் வெளியேறும் கழிவுநீரால், வணிகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நோய் தொற்று பரவும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.