/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சீரமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சீரமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சீரமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 25, 2025 04:03 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்ன அய்யங்குளம் சாலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதித்த இடத்தில், கான்கிரீட் சாலையை முறையாக சீரமைக்காததால், ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன அய்யங்குளம் பிரதான சாலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. பள்ளம் தோண்டியதால், சேதமான சாலையை கான்கிரீட் கலவை வாயிலாக சீரமைத்தனர்.
இப்பணியை முறையாக செய்யாததால், கான்கிரீட் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடு மாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சின்ன அய்யங்குளம் பிரதான சாலையில், பள்ளம் ஏற்பட்டுள்ள கான்கிரீட் சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.