/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
/
பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
ADDED : நவ 10, 2025 12:38 AM
காஞ்சிபுரம்: பைக் மீது, லாரி மோதியதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் காயத்திரி நகரைச் சேர்ந்த ரஜினி, 38. தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று முன் தினம், மாலை, 6;18 மணி அளவில், 'ஹீரோ' பைக்கில், நண்பர் ராஜேஷ் என்பவருடன், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்றார்.
அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம் நோக்கி சென்ற, 'அசோக் லேலண்ட்' லாரி, ஏரிவாக்கம் அருகே சென்ற போது, பைக் மீது மோதி உள்ளது.
காயமடைந்த ரஜினி, ராஜேஷ் ஆகிய இருவரையும் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஜினி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

