/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவலர் எழுத்து தேர்வில் 635 பேர் ஆப்சென்ட்
/
காவலர் எழுத்து தேர்வில் 635 பேர் ஆப்சென்ட்
ADDED : நவ 10, 2025 12:56 AM
காஞ்சிபுரம்: இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில், 635 நபர்கள் பங்கேற்கவில்லை என, காவல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று தேர்வு மையங்களில், இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நேற்று நடந்தது. இதில், 3,630 ஆண்கள், 1,053 பெண்கள் என, மொத்தம் 4,683 பேர் எழுத்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டனர். இந்த எழுத்துத் தேர்வில், 4,048 நபர்கள் பங்கேற்றனர்; 635 நபர்கள் தேர்வு எழுதவில்லை.
ஏனாத்துார் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், நேற்று நடந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில், 15 நாட்கள் பச்சிளம் குழந்தையுடன் துாசி மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வு எழுத வந்திருந்தார்.
இந்த எழுத்து தேர்வுக்கு, 540 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

