/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.17 லட்சம் வழிப்பறி போலி போலீசுக்கு வலை
/
ரூ.17 லட்சம் வழிப்பறி போலி போலீசுக்கு வலை
ADDED : பிப் 12, 2025 01:50 AM
சென்னைராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மகாதீர் முகமது, 27. அவர் ராயப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில், 17 லட்சம் வைப்புத்தொகை செலுத்துவதற்காக, மண்ணடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் மாலை சென்றார்.
மெரினா காமராஜர் சாலையில் உள்ள பார்த்தசாரதி கோவில் வளைவு அருகே சென்றபோது, மூன்று பேர் தங்களை போலீஸ் என கூறி, அவரை வழி மறித்துள்ளனர். அவர் எடுத்து வந்த, 17 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களை கேட்டுள்ளனர்.
ஆவணங்கள் இல்லை என்றதும் அதை காண்பித்து பெற்றுக்கொள்ளுமாறு பணத்துடன் மூவரும் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து மெரினா காவல் நிலையத்திற்கு சென்ற மகாதீர் முகமது, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அப்போது, போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த மெரினா போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மகாதீர் முகமது பணம் எடுத்துச் செல்வதை நன்கு அறிந்த கும்பல், திட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

