/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளத்தாஞ்சேரி சாலையோரம் விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
/
வளத்தாஞ்சேரி சாலையோரம் விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
வளத்தாஞ்சேரி சாலையோரம் விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
வளத்தாஞ்சேரி சாலையோரம் விழுந்துள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம்
ADDED : மார் 18, 2025 12:18 AM

ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில் இருந்து, தத்தனுார் ஊராட்சி வழியாக, வளத்தாஞ்சேரி - - பேரிஞ்சாம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வளத்தாஞ்சேரி, குண்டுபெரும்பேடு, தத்தனுார், பேரிஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதியினர், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் - வடகால் பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.
தவிர, தெரேசாபுரம் பகுதியில் இயங்கிவரும் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ -- மாணவியர் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், தெரேசாபுரம் சந்திப்பு அருகே வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர், சாலையோரம் விழுந்து உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் விழுந்துள்ள விளம்பர பேனர் மீது, எதிர்பாராத விதமாக மோதி, விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், பிரதான சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.