/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓரினச்சேர்க்கையை தடுத்ததால் வழிப்பறி நடந்ததாக போலி புகார்
/
ஓரினச்சேர்க்கையை தடுத்ததால் வழிப்பறி நடந்ததாக போலி புகார்
ஓரினச்சேர்க்கையை தடுத்ததால் வழிப்பறி நடந்ததாக போலி புகார்
ஓரினச்சேர்க்கையை தடுத்ததால் வழிப்பறி நடந்ததாக போலி புகார்
ADDED : ஏப் 23, 2025 07:30 PM
குன்றத்துார்:குன்றத்துார் அடுத்த கோவூரைச் சேர்ந்த, 38 வயது நபர், குன்றத்துார் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார்.
அதில், நண்பர் ஒருவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தேன்.
வழுதலம்பேடு அருகே, 'லிப்ட்' கேட்ட சிறுவனை வாகனத்தில் ஏற்றி சென்றபோது, மூன்று பேர் கும்பல் விரட்டி வந்து, தன்னை தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, புகார் அளித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அந்த நபரின் மொபைல் போனை சோதனை செய்தனர்.
அதில், ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் மொபைல் போன் செயலி இருந்துள்ளது.
மேலும், சம்பவத்தன்று அந்த செயலி வாயிலாக அறிமுகமான, 14 வயது சிறுவனுடன் வழுதலம்பேடு வந்ததும், அங்கு சில்மிஷத்தில் ஈடுபட்ட இவர்களை, அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது.
எனவே, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை மறைக்க, தங்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக பொய்யான புகார் அளித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 14 வயது சிறுவன் மற்றும் புகார் அளித்த நபரிடம், குன்றத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.