/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவாந்தண்டலத்தில் நெற்களம் இல்லாததால் சாலையில் நெல்லை உலர வைக்கும் விவசாயிகள்

ADDED : ஆக 11, 2025 11:45 PM

வாலாஜாபாத், காவாந்தண்டலத்தில் நெற்களம் இல்லாததால், சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் உலர வைக்கின்றனர்.
வாலாஜாபாத் வட்டாரம், காவாந்தண்டலம் கிராமத்தில், ஏரி பாசனம் மற்றும் செய்யாற்று பாசனம் வாயிலாக ஆண்டுதோறும் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.
சம்பா பட்டத்திற்கு மட்டும், 700 ஏக்கர் நில பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதியில், இதுவரை நெற்களம் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.
இதனால், அறுவடை காலங்களில் விவசாயிகள் கதிரடித்து நெல் பிரித்தல் போன்ற பணிகளுக்கு, களம் இல்லமால் அவதிபடுகின்றனர்.
மேலும், இயந்திரம் மூலம் அறுவடை செய்கின்ற நெல்லை, ஈரப்பதம் போக்க உலர வைக்க இடவசதி இல்லாததால், சாலைகளிலும், தெருப் பகுதிகளிலும் கொட்டி உலர வைக்கின்றனர். அச்சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுகுறித்து, காவாந்தண்டலம் ஊராட்சி தலைவர் ராதா கூறியதாவது:
காவாந்தண்டலம் ஊராட்சியில் நெற்களம் அமைக்க கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்துள்ளோம்.
நெற்களம் ஏற்படுத்த இடவசதி இருந்தும், நிதி பற் றாக்குறையால் இதுவரை அமைக்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
எனவே, காவாந்தண்டலம் ஊராட்சியில் நெற்களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறி னார்.