/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒழையூர் ஏரி மதகிற்கு திருகு ஆணி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ஒழையூர் ஏரி மதகிற்கு திருகு ஆணி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஒழையூர் ஏரி மதகிற்கு திருகு ஆணி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஒழையூர் ஏரி மதகிற்கு திருகு ஆணி அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 18, 2025 01:50 AM

ஒழையூர்:ஒழையூர் நீர்வளத் துறை ஏரி மதகிற்கு, திருகு ஆணி அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஒழையூர் கிராமத்திற்கும், மதுரா மோட்டூர் கிராமத்திற்கும் இடையே, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரிநீரை பயன்படுத்தி 450 ஏக்கர் நிலத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஏரிக்கு மூன்று இடங்களில் பிரதான மதகுகள் உள்ளன. இந்த மதகுகளின் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதில், பள்ள மதகின் திருகு ஆணி இல்லை. இதனால், தண்ணீரை நிறுத்துவதற்கு மண் மூட்டைகளை போட்டு அடைக்க வேண்டிய நிலை உள்ளது.
பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போது, மதகு அருகே ஆபத்தான முறையில் இறங்கி தண்ணீரை திறக்க வேண்டி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒழையூர் ஏரி மதகிற்கு திருகு ஆணி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.