/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விரிவான வழிகாட்டுதல் வேண்டும்' நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
/
'காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விரிவான வழிகாட்டுதல் வேண்டும்' நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
'காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விரிவான வழிகாட்டுதல் வேண்டும்' நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
'காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விரிவான வழிகாட்டுதல் வேண்டும்' நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 25, 2025 02:55 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.
இதில், விவசாயிகள், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, வேளாண் இணை இயக்குனர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், வேளியூர் கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக, ஐந்து விவசாய பயனாளிகளுக்கு 4.03 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன்களும், முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக, நான்கு விவசாய பயனாளிகளுக்கு 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மேலும், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், இரு பயனாளிகளுக்கு 11,000 ரூபாய் மதிப்பிலான மண்புழு உரப்படுக்கை உள்ளிட்ட 5.95 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், ஒன்றியம் வாரியாக, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் பிரச்னைகளையும், சொந்த பிரச்னைகளையும் தெரிவித்தனர். துறை வாரியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் கலைச்செல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:
பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறை அனுமதி அளித்த விவகாரத்தில், அதற்கான விரிவான வழிகாட்டுதல் வெளியிட வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளது. வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு, உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களை அரசு சார்பில் அதிகளவு அனுப்ப வேண்டும்.
'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இதுவரை அரசு சார்பில் நிவாரணம் கொடுக்கவில்லை.
தொகுதிக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும் என அரசு அறிவித்த நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு ஒன்றும், உத்திரமேரூர் தொகுதிக்கு ஒரு தடுப்பணையை விரைவில் கட்ட வேண்டும்
பயிர் காப்பீடுக்கு பிரீமியம் செலுத்தியும், பலருக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் இதன் வாயிலாக பயனடைகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட அளவில், நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளும் போது, கால்வாய்களை பணியாளர்கள் சேதப்படுத்துகின்றனர். இதனால், விவசாய நிலங்களுக்கு மழைநீர், பாசன நீர் வருவதில்லை.
விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் கிடைப்பதில்லை.
விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில், கிராமப்புறங்களில் வேளாண் பயிற்சியை நவீனப்படுத்தி அதிகளவு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.