/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
/
உத்திரமேரூரில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
உத்திரமேரூரில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
உத்திரமேரூரில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : டிச 11, 2024 11:19 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார நிலப்பரப்பில், 70 சதவீதம் விவசாய நிலங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
இங்குள்ள விவசாயிகள், ஏரி பாசனம், கிணற்று பாசனம், ஆற்று பாசனம் மூலம், சம்பா, சொர்ணாவாரி, நவரை ஆகிய 3 பருவங்களிலும், அதிக அளவு நெல் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான பருவ மழை துவங்கயதையடுத்து, பல்வேறு பகுதிகளில் சம்பா பட்டத்திற்கான முதற்கட்ட சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.
திருமுக்கூடல், மதுார், எடமச்சி உள்ளிட்ட ஒன்றியத்தின் பல பகுதிகளில், நெல் சாகுபடியில் நடவுக்கு மாற்றாக நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா பட்ட சாகுபடியை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து, திருமுக்கூடல் விவசாயிகள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நேரடி நெல் விதைப்பிலான விவசாயத்தை மேற்கொள்கிறோம்.
நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் குறைந்த செலவு ஏற்படுவதோடு, நடவு முறையிலான சாகுபடியில் கிடைக்கும் மகசூல் அளவுக்கு சமமான மகசூல் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினர்.
நெல் நாற்று நடும் பணி துவக்கம்
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களின் கட்டுப்பாட்டில், 1.50 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
இதில், சம்பா பருவத்தில், 37,050 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு, வேளாண் துறை இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. இதில், 32,110 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல், நவரை பருவத்திற்கு, 46,930 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, நவரை பருவத்திற்கு விவசாயிகள் நெல் நாற்று நடும் பணியை துவக்கியுள்ளனர். வட கிழக்கு பருவ மழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செர்ப்பமான ஏரிகளை நிரம்பி இருப்பதால், நவரை பருவத்திற்கு இலக்கு எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதால், ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணற்று நீரை பயன்படுத்தி விவசாய சாகுபடி பரப்பு குறைவு இருக்காது என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.