/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் சம்பா பருவ சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்

ADDED : டிச 22, 2025 05:12 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய கிராமங்களில் சம்பா பருவ சாகுபடிக்கு, நேரடி நெல் விதைப்பு முறையில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டார மொத்த நிலப்பரப்பில், 60 சதவீதம் விவசாய நிலங்களை உள்ளடங்கியதாக உள்ளது.
இங்குள்ள விவசாயிகள், ஏரி பாசனம், கிணற்று பாசனம் மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக, சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், பெரும்பாலும் நெல் பயிரிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
தற்போது நடப்பாண்டு பருவ மழைக்கு பெரும்பாலான ஏரிகள் நிரம்பாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனினும், ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு, புத்தகரம், கரூர், தென்னேரி உள்ளிட்ட கிராமங்களில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக, சம்பா பட்டத்திற்கான சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.
கடந்த சொர்ணவாரி பட்ட நெல் சாகுபடிக்கு, நாற்று நடவு முறையை காட்டிலும் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையை கடைபிடித்தனர்.
இதேபோன்று, சம்பா பட்ட சாகுபடிக்கும் தற்போது நேரடி நெல் விதைப்பு முறையிலான சாகுபடியையே விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர்.
நேரடி நெல் விதைப்பு சாகுபடியில், செலவு குறைந்து மகசூல் கணிசமான அளவு கிடைப்பதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.