/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத சாலை வளைவு: பென்னலுாரில் ஆபத்து
/
தடுப்பு இல்லாத சாலை வளைவு: பென்னலுாரில் ஆபத்து
ADDED : டிச 22, 2025 05:13 AM

ஸ்ரீபெரும்புதுார்:பென்னலுார் சாலையில் தடுப்பு இல்லாத வளைவில், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்ற னர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பென்னலுார் துணை மின் நிலையம் அருகே இருந்து பிரிந்து செல்லும், பென்னலுார் சாலை, 3.5 கி.மீ., துாரம் உடையது.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலைகளை இணைக்கும் சாலையாக விளங்கும் பென்னலுார் பிரதான சாலை வழியே, கார், பைக், பள்ளி மற்றும் கல்லுாரி பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள், நாள்தோறும் சென்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்த இந்த சாலை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.98 கோடி ரூபாயில், அக் டோபரில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பென்னலுாரில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நோக்கி செல்லும் சாலையில், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரி அருகே, சாலை வளைந்து செல்கிறது.
இந்த சாலை வளைவில் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சிறு பாலத்தில் இருந்து தவறி விழுந்து விபத்தில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலை வளைவில் தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

