/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 03, 2025 06:54 AM
காஞ்சிபுரம்: முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் உழவர் பாதுகாப்புத் திட்டம், காஞ்சி புரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுகாக் களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம் படுத்த இத்திட்டம் செயல்படுகிறது.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீடாக, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாகவும், விபத்து காரணமாக உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி 20,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இயற்கை மரணத்துக்கான நிதி உதவி 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், இறுதிச்சடங்கு செய்ய 2,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பங்கள், 2.50 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் அளவிற்குட்பட்ட நிலத்தை சொந்தமாக வைத்திருந்து அதில் நேரடியாக பயிர் செய்யும் சிறு, குறு விவசாயிகள் அல்லது அந்த நிலத்தில் பயிரிடும் குத்தகைதாரர் களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.
மேலும், 18 - 65 வயது வரையுள்ள முதன்மை உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிவப்பு நிற அதாவது மெரூன் நிற அட்டையும், மூல உறுப்பினரை சார்ந்த பிற குடும்ப உறுப்பினர்கள் சாம்பல் நிற அட்டையும் வைத்திருக்க வேண்டும்.
முதன்மை உறுப்பினர் களை சார்ந்து வாழ்பவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் முதல்வரின் உழவர் பாதுகாப்பு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை தனி தாசில்தார் அலுவலகத்திலும், கிராம நிர்வாக அலுவலரிடமும் மனு அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

